தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் கான்வாய் எச்சரிக்கை வாகனமானது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து! - நேரு ஸ்டேடியம்

சென்னை பழைய விமான நிலையத்திற்கு அருகே முதலமைச்சரின் கான்வாயின் எச்சரிக்கை வாகனம் இருசக்கர வாகனத்கின் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வரின் கான்வாய் எச்சரிக்கை வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து!
முதல்வரின் கான்வாய் எச்சரிக்கை வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து!

By

Published : May 26, 2022, 10:40 PM IST

சென்னை : நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் தேசிய நெடுஞ்சாலை புதிய திட்டங்கள், ரயில்வே புதிய திட்டங்கள் உட்பட மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமா் தொடங்கி மற்றும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி முடித்துவிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, கார் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்து கொண்டிருந்தார்.

அதற்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய், சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பாக வந்து கொண்டிருந்த எச்சரிக்கை வாகனமானது, பழைய விமான நிலையத்திற்குள் திரும்பும்பொழுது சாலை ஓரமாக வந்துகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி பழைய விமான நிலையம் வாயில் முழுவதும் போலீசார் நின்று கொண்டிருந்ததால், பதறியபடி அங்கிருந்து எழுந்து ஓடினார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலையில் விழுந்து கிடந்த இருசக்கர வாகனத்தை சாலையோரமாக இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினர்.

முதலமைச்சரின் கான்வாய் எச்சரிக்கை வாகனம்; இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து!

அதன்பின் சிறிது நேரத்தில் முதலமைச்சரின் வாகனம் பழைய விமான நிலையத்திற்குச் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


இதையும் படிங்க :'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!

ABOUT THE AUTHOR

...view details