தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், தங்கள் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்களது கோரிக்கையினை ஏற்று ஊரடங்கு நேரத்தில் அனைத்து நிலை அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு வராத நாள்களை பணிக்காலமாக அரசு வெளியிட்டுள்ளது. அதேபோன்று, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பணியாளர்களும் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வருவதற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டது.