தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Omicron Variant Virus: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை! - உலகை அச்சுறுத்தும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்

உலகிற்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலர் வெ. இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Omicron Variant Virus
Omicron Variant Virus

By

Published : Nov 29, 2021, 2:04 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (நவம்பர் 29) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், தமிழ்நாடு அரசின் முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா உள்பட பல நாடுகளில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, சீனா, இஸ்ரேல், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அந்தவகையில் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் வெ. இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கவுள்ளார். மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும்.

கரோனா பரிசோதனை மாதிரிகளை உடனடியாக ஆய்வுக் உட்படுத்த வேண்டும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி, தடுப்பூசி குறைவாகச் செலுத்திய மாவட்டங்களில், விரைவாகத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: Tamilnadu Curfew: ஊரடங்கு நீட்டிப்பா? - ஸ்டாலின் ஆலோசனை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details