தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை! - ஒன்றிய அரசின் திட்டம்

ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலைகுறித்து ஆளுநருக்கு விளக்கமளிக்க அனைத்து துறை செயலாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

2
1

By

Published : Oct 26, 2021, 1:15 PM IST

சென்னை:தலைமை செயலாளர் இறையன்பு இன்று (அக்.26) அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொறு துறையிலும் ஒன்றிய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் திட்டங்கள் என்னென்ன, மாநில அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் விவரம், திட்டம் பயன் அடைந்ததா உள்ளிட்டவை குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அனைத்து துறை செயலாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கணிணி மூலம் திட்ட அறிக்கை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆளுநரை சந்தித்து விளக்கமளிப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர். என். ரவி அண்மையில் ஒன்றிய அரசின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்தநிலையில் துறை சார்ந்த திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details