தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணி: தலைமை செயலாளர் ஆய்வு - Rainwater drainage works

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

தலைமை செயலாளர் ஆய்வு
தலைமை செயலாளர் ஆய்வு

By

Published : Dec 4, 2022, 2:27 PM IST

சென்னை: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் 89 கோடியே 64 லட்சம் செலவில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நடைபெற உள்ள இடங்களை தலைமை செயலாளர் இறையன்பு இன்று (டிச. 4) ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் அவருடன் வந்தனர்.

தலைமை செயலாளர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சியில் அம்பாள் நகர், திருமலை நகர், வள்ளல் யூசுப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். மேலும் நிரந்தர தீர்வு காண தயாரிக்கப்பட்டு உள்ள திட்ட மதிப்பிற்கு உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சந்து கடையில் மது விற்பனைக்கு போலீஸ் சர்போர்ட்..? எஸ்ஐ ஒருமையில் பேசிய வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details