சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (அக். 1) தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவான்மியூர் எல்.பி. சாலை கால்வாயில் நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள், ஜாஃபர்கான்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள், வால்டாக்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.