இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் (COVID-19) பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, நிதிப் பங்களிப்பை வழங்க முதலமைச்சர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் - சண்முகம்! - முதலமைச்சர் நிவாரண நிதி
சென்னை: அரசு பணியாளர், ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என, தலைமை செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் அறிக்கை
இதனையடுத்து, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு நாள் சம்பளம் அல்லது ஒரு நாளுக்கு மேல் சம்பளத்தையும் வழங்கவும் விருப்பம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் உயிரிழப்பு!