தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கத் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதைத் தொடர்ந்து கரோனா நிவாரணப் பணிகளுக்காக அரசு சார்பில், விருப்பமுள்ளவர்களிடம் இருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து நிலை தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களின் விருப்பத்தின் பேரில், ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவது என மே 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா நிவாரண நிதி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் தலைமைச் செயலக பணியாளர்கள்! - கரோனா நிவாரண நிதி
சென்னை: கரோனா நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா நிவாரண நிதி