தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இதையடுத்து, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக ஆக.26 முதல் 120 நாள்களுக்கு 324 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.