சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசுத் துறையின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், தொடர்பாக அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
முதல் நாளான இன்று (ஜூன்1) நிதி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, பொதுத்துறை எரிசக்தி நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பவியல் தமிழ் வளர்ச்சித் துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு வணிகவரித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட 19 துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு! - public sector
அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசுத் துறையின் செயல்பாடுகள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பரில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்த கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து அத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்களுக்கும் துறைச் செயலாளர்களுக்கும் முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் எங்கு சென்றாலும் விட மாட்டோம்...! - சென்னை போராட்டத்தில் அண்ணாமலை கொந்தளிப்பு