தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஊதிய பிரச்சனைக்கு முதலமைச்சர் தீர்வு காண்பார்’ - அமைச்சர் சக்கரபாணி! - சென்னை செய்திகள்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதிய பிரச்னைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்வு காண்பார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

’ஊதிய பிரச்சனைக்கு முதலமைச்சர் தீர்வு காண்பார்
’ஊதிய பிரச்சனைக்கு முதலமைச்சர் தீர்வு காண்பார்

By

Published : Jun 23, 2021, 7:01 PM IST

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கூறுகையில், ’’டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக உள்ளது. கடந்த ஆட்சியிலிருந்த அதிமுக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 165 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு ஊழியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டு ஆளும் அரசு அவர்களின் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் ’’ என கோரிக்கையை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ’’கடந்த வாரம் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, அங்கு நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்.

தற்போது, அதே கோரிக்கையை சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா முன் வைத்துள்ளதாக” கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் 2,608 ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இதற்கு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் தீர்வு காண்பார். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தருவதன் மூலம் 35,000 குடும்பங்கள் பயன்பெறும்’’ என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவல் துறை வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி

ABOUT THE AUTHOR

...view details