சென்னை: கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இன்று (அக்.16) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாம்களின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை , குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவர்களால் நோயை கண்டறிந்து, பொது மக்களுக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.
மருத்துவ முகாம்களின் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே, நோய்க்கான ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கான ஆலோசனைகளை பெற இயலும்.
முகாமில் 35 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர். இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள்.
சிகிச்சை விவரம்
பில்ராத் - புற்றுநோய்
ஆர்பிஎஸ் - குடல் மற்றும் கல்லீரல்
முருகன் - நரம்பு மற்றும் எலும்பு
போர்டிஸ் மலர் - இருதய சிகிச்சைகள்
வாசன் - கண் பரிசோதனைகள் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்குதல்