11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி , தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2001-02ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.