சென்னை ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனின் தந்தை இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில், “ஜெயஸ்ரீ முரளிதரனின் தந்தை பூவராகவன் (87) உடல்நலக் குறைவினால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சென்னை ஆட்சியரின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் ! - ஆட்சியரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்
சென்னை: ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனின் தந்தை மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
![சென்னை ஆட்சியரின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் ! ஆட்சியரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7095695-thumbnail-3x2-cm.jpg)
ஆட்சியரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்
பூவராகவனை இழந்து வாடும் அவரது மனைவி சாந்தா அம்மையார், அவரது மகன் பாலாஜி , அவரது மகளும் எனது செயலாளருமான ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா - ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் ஆய்வு!
TAGGED:
Cm condolences