தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுசூதனனை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்! - madhusoothanan health issue

சென்னை: காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

cm
cm

By

Published : Aug 26, 2020, 7:18 PM IST

அ.தி.மு.க. அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைப்பயிற்சியின் போது தவறி விழுந்ததில் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுசூதனன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள மதுசூதனன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அதிமுகவில் தற்போது உள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின்போது தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details