நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபால பெருமாள் சாமி கோயிலில் 1978ஆம் ஆண்டு காணாமல் போன ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் லண்டனில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டுவரப்பட்டன. லண்டனில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சிலைகளை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் ஒப்படைத்தார்.
ராமர், சீதா, லட்சுமணன் சிலைகளை பார்வையிட்ட முதலமைச்சர்!
சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரால் மீட்கப்பட்ட ராமர், சீதா, லட்சுமணன் சிலைகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.
பின்னர் மீட்கப்பட்ட சிலைகள் கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரை பாராட்டினார். பின்பு இச்சிலைகளை ராஜகோபால பெருமாள் கோயிலில் மீண்டும் வைத்து வழிபடும் வகையில், செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க:ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இளைஞர்கள் - அதிர்ச்சி காணொலி
TAGGED:
cm house