சென்னை: மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில் நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டு, 1.09 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
இதன் மூலம் மற்றவர்களை போல் மாற்று திறனாளிகளும் கடலின் அருகில் இருந்து மெரினா கடலின் பேரழகை அழகை ரசிக்க முடியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ”பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது” என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.