வடகிழக்குப் பருவமழை: முதலமைச்சர் ஆலோசனை - வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளபட இருக்கிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்நிலையில், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசு உயர் அலுவலர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளார்.
ஏரி, குளங்கள் தூர்வாருதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக தங்கவைப்பது உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.