சென்னை:தனியார் நாளிதழ் புகைப்பட கலைஞர் கே.வி. சீனிவாசன்(56) இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கே.வி.சீனிவாசன் (வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.