சென்னை: ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி20 கூட்டம் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.