தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் டெல்லி பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.18) மாலை பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை குறித்து பேச உள்ளார்.

பிரதமரை சந்திக்க உள்ளார் மு க ஸ்டாலின்
பிரதமரை சந்திக்க உள்ளார் மு க ஸ்டாலின்

By

Published : Jul 18, 2021, 1:26 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.18) மாலை ஐந்து மணிக்கு, பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்துவதற்காக டெல்லி செல்கிறாா்.

மேலும் மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலருமான கனிமொழி, தம்பிதுரை, தயாநிதி மாறன் ஆகியோா் இன்று (ஜூலை.18) மாலை 5.20 மணிக்கு, விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்கின்றனர். இதற்கான அனைவரும் மாலை 4.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரவுள்ளனர்.

டெல்லி செல்லும் முதலமைச்சர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது எனவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு துணை ஆணையர் ஜெயலட்சுமி நியமனம்

ABOUT THE AUTHOR

...view details