தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில், முதலமைச்சராக இன்று(மே.7) பதவி ஏற்று கொண்ட மு.க ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார.
கரோனா தொற்று பரவல் - முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை! - கரோனா தொற்று
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர்கள், மருத்துவத்துறை அலுவலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின்
இக்கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், சுகாதார முதன்மை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். கள நிலவரத்தை மறைக்காமல் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பன்முகத் தன்மை கொண்ட வெ.இறையன்பு, கடந்து வந்த பாதை..