சென்னை:ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி (84), சிறு வயதிலேயே சமூக தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ரோமன் கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சுவாமி, பெங்களூருவில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல், இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
பழங்குடியின மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமி
பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஜார்க்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.