தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இல்லம் தேடி கல்வி திட்டம் அக்.27இல் மரக்காணத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தை அக்.27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி வைக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Oct 24, 2021, 4:48 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இல்லம் தேடி கல்வி

இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி, கற்றல் குறைபாட்டைப் போக்க ‘இல்லம் தேடி கல்வி’ என்னும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் மூலம் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டின் அருகே சென்று மாலை நேரத்தில் கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவார்கள்.

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலைப் பயண வாகனம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில் வரும் அக்.27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: மருதுபாண்டியர்களின் 220 ஆவது ஆண்டு குருபூஜை விழா

ABOUT THE AUTHOR

...view details