சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினர் 3ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், “பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது 73 ஆண்டுகாலம். இன்னும் 2 ஆண்டில் 75ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும்; இல்லை என்றாலும் தமிழர்களுக்காக தமிழ்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்.