தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க' - முதலமைச்சர் ஸ்டாலின் - சென்னை அண்மைச் செய்திகள்

கனமழையால் சேதமடைந்த மாவட்டங்களில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதுடன், அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Oct 17, 2021, 6:47 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்யும் கனமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (அக்.17) நடைபெற்றது.

அப்போது நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக மழை சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் அவர் உத்தரவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதுடன், அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:கேரள வெள்ளம்: கடவுளின் தேசத்தில் கோரத் தாண்டவம் ஆடிய மழை!

ABOUT THE AUTHOR

...view details