தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உங்கள் துறையில் முதலமைச்சர்...காவல்துறையினரிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்... - Ungal Thuraiyil muthalvar

சென்னையில் காவலர்களின் குறைகளை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனுக்களை பெற்றார்.

‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்
‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Sep 22, 2022, 12:31 PM IST

சென்னை:மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல்துறையினரின் நலன் காத்திட காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காத்திடவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கியது, காவலர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அலுவலர்களுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300 வழங்கியது போன்ற திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்

15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குதல், காவலர்கள் விடுப்பு எடுக்க வசதியாக சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட “CLAPP விடுப்பு செயலி” வெளியீடு, காவலர்களுக்கான இடர்படியை ரூ.1000 ஆக உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.

‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும் அவர்களின் குறைகளை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்.

முன்னதாக சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பி.தாமரைக்கண்ணன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க:போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details