தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் சித்த வைத்திய சிகிச்சை முறையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர்.
இந்நிலையில், மீண்டும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற சிகிச்சை மையங்களை விரிவுப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் ஒரு மாதத்துக்குள் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.