தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.194. கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைப்பு - மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்த ஸ்டாலின்

சென்னையில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவக் கருவிகள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

Etv Bharat பல திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்
Etv Bharat பல திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

By

Published : Aug 27, 2022, 4:21 PM IST

சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக 27) எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 65.60 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையின் 200ஆவது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட கட்டடத்தை திறந்து வைத்தார். 63.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்து, 65.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவச் சேவை வாகனங்கள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இந்தப் புதிய கட்டடத்தில் 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கருவிழி சிகிச்சை பிரிவு, கண்குழி சிகிச்சை பிரிவு, விழித்திரை சிகிச்சை பிரிவு, உள் கருவிழி சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் நரம்பு இயல் மாற்றுக்கண் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்ட்ரெச்சருடன் கூடிய பேட்டரி கார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு குறைப் பிரசவ இறப்பைக் குறைக்க 15 கோடி ரூபாய் மதிப்பிலான 150 பிறந்த குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்.

பல திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதாரத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள் உள்பட மொத்தம் 236 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

இதையும் படிங்க:குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்... ஸ்ரீமதியின் தாயார் செல்வி...

ABOUT THE AUTHOR

...view details