தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகராஜ பாகவதரின் மகள்வழி பேரனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர்! - தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனுக்கு ஒதுக்கப்பட்ட, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்கான திறவுகோலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 2) வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Jul 2, 2021, 2:28 PM IST

சென்னை: எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில்கொண்டு, அவருக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது.

இதற்கான ஆணையையும், அவ்வீட்டிற்கான சாவியையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நிவாரணமாகவும், தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வ. கலையரசி உடனிருந்தார். தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் தனிப்பிரிவில், எங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ள காரணத்தால் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details