சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் மழைக் காலங்களில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டப் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட முதலமைச்சர் - M K Stalin
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா முடிந்த பிறகு அங்கு இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து ஸ்டாலின் உணவருந்தினார்.
தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் ஸ்டாலின்
மொத்தம் 586 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பாராட்டு விழா முடிந்த பிறகு அங்கு வந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா முடிந்த பிறகு முதலமைச்சரும் அங்கு இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து உணவருந்தினார்.
இதையும் படிங்க:"நான் முதல்வன் திட்டத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி" - TNSDC இயக்குனர்