சென்னை:தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி, தமிழ்நாட்டில் 264 புலிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில், 10 சதவீதம் தமிழ்நாட்டிலேயே உள்ளது. புலிகள் பாதுகாப்பில், தமிழ்நாட்டின் முன்னோடி முயற்சிகளுக்கு பொருத்தமாக, வரும் அக்டோபரில், சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து, தமிழ்நாடு அரசு சார்பில், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு: முதலமைச்சர் அறிவிப்பு - தமிழகத்தில் புலிகள் உச்சி மாநாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை