தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு ஜாக்-பாட்.. மூன்று புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. - Stalin announced three schemes

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு மூன்று திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஆசிரியர்களுக்கு மூன்று திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Mar 1, 2023, 11:27 AM IST

Updated : Mar 1, 2023, 11:37 AM IST

சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச். 3) 70ஆவது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். இந்த நாளில் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், "திமுக ஆட்சி அமைந்த கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் ரூ.225 கோடியில் அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு மூன்று திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது. மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.

மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.

அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

Last Updated : Mar 1, 2023, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details