தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் நாளை நாகை பயணம்! - Chief Minister Edappadi Palanisamy

கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஆக. 27) நாகை செல்கிறார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Aug 26, 2020, 1:03 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஆக. 27) பிற்பகல் நாகைக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். பின்னர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்.

நாகையில் ஆய்வுக் கூட்டம் நிறைவு செய்தபின், திருவாரூர் செல்லும் அவர், 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க:நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details