தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
இந்த மையத்தின் மூலம், ஆண்டு தோறும் சுமார் இரண்டாயிரம் நபர்கள் தோல் பதனிடும் பிரிவில் உயர் திறன் பயிற்சி பெற்று, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையக் கட்டடம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மெஷினிஷ்ட் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம்; சென்னை, வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக் ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை, பணிமனை கட்டடம்; என மொத்தம் 9 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், சேலம் மாவட்டம் - கருமந்துறை, நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை, நீலகிரி மாவட்டம் - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர்களின் திறன், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்புத் திறன், தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்திட தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் M/s . TITAN நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
M/s . TITAN நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இதையும் படிங்க:பாசனத்திற்காக நம்பியாறு நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!