தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், ”மாலைத் தமிழகம் நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிவந்த பெ. ராஜன் நேற்று (ஜூலை14) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்துவரும் பத்திரிகைத் துறையில் செய்தியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., மக்கள் குரல் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில்
சுமார் 20 ஆண்டு காலமாகப் பணியாற்றியவர் ராஜன்.
மூத்த பத்திரிகையாளர் ராஜன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் ராஜன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பநலனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப நிதியுதவி, மறைந்த செய்தியாளர் ராஜன் குடும்பத்தினருக்கும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க:மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்