தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஸி.,க்கு எதிராக மெர்சல் காட்டிய தமிழக வீரர்கள்... முதலமைச்சர் பாராட்டு - நன்றி தெரிவித்த அஸ்வின்! - india vs Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

Ashwin Thanks Edappadi Palanisamy
Ashwin Thanks Edappadi Palanisamy

By

Published : Jan 19, 2021, 7:27 PM IST

Updated : Jan 19, 2021, 9:19 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக கடைசி போட்டியில் விளையாட நிலையிலும், இளம் வீரர்கள் களம் இறங்கி ஆஸ்திரேலியாவில் தரமான ஒரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என பதிவிட்டு ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மூன்று பேரையும் டேக் (tag) செய்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்த அஸ்வின்

இந்த பதிவை ரீட்வீட் செய்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக வீரர் அஸ்வின், " நன்றிகள் பல, ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் தலைச்சிறந்த வெற்றி ஆக இதை கருதுகிறேன். நம் தமிழ் மண்ணிலிருந்து மூன்று பேர் பங்கேற்றது எனக்கும் பெருமையை அளிக்கிறது. எனது வாழ்த்துகள் வாஷி & நட்டுக்கும்" என பதிவிட்டுள்ளார்.

மெர்சல் காட்டிய தமிழக வீரர்கள்

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீச்சிலும், மூன்றாவது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு முக்கியப் பங்காற்றினார். அப்போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறுதி டெஸ்டில் பங்கேற்கவில்லை.

அதேபோன்று கடைசி போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த நட்ராஜ் பவுலிங்கிலும், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் வலு சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

இதையும் படிங்க:'இளம் வீரர்களின் சிறந்த ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்' - இந்திய அணிக்கு ஸ்டாலின் பாராட்டு!

Last Updated : Jan 19, 2021, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details