தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு! - குப்பநத்தம் நீர்த்தேக்கம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister orders to open water from Kuppanatham reservoir!
Chief Minister orders to open water from Kuppanatham reservoir!

By

Published : Nov 16, 2020, 5:30 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020 முதல் 29.11.2020 வரை 12 நாட்களுக்கு, 252.26 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020 முதல் 29.11.2020 வரை 12 நாட்களுக்கு, 252.26 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள நான்காயிரத்து 498.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details