சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
- உயர் கல்வித் துறையில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்கள்,
- மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டியுள்ள மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள்,
- பத்திரப்பதிவுத் துறையில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம்,
- வேளாண்மைத் துறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்,
- ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்துவைத்தார். அவர், பத்திரப்பதிவுத் துறையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.