சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான நிதியை முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என்று பல தரப்பிடம் இருந்து பெற்று அதனை பயன்படுத்தும் திட்டம் ‘நம்ம ஸ்கூல்’ திட்டமாகும்.
'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 19) தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளின் கட்டட மேம்பாடு, இணையதள வசதிகள், ஆயவகங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த இணையதளப்பக்கத்தின் மூலம் உதவ விரும்புபவர்கள் உதவி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அர்ஜென்டினா அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து