தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தைப் புனரமைத்து திறந்துவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் - latest tamil news

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

By

Published : Dec 11, 2022, 5:52 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது. அதோடு பாரதியாரின் மார்பளவுச் சிலையும் அமைக்கப்பட்டது. இவர்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

மகாகவி பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 11.12.1882ஆம் ஆண்டு பிறந்தார். தாய்நாட்டின் விடுதலைக்கு உணர்ச்சிமிக்க பல பாடல்களை இயற்றினார். 17 ஆண்டுகளாக சுதேசமித்ரன், இந்திய சக்கரவர்த்தினி, பால பாரதம் போன்ற பல பத்திரிகைகள் மூலமாக சிறந்த கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி, நாட்டு மக்களின் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்த பெருமைக்குரியவர்.

பெண் விடுதலை குறித்து எழுதிய பாடல்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை, தாய்மொழித் தமிழைத் தெய்வமாகப் போற்றியவர் மகாகவி பாரதியார். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று பாரதியின் நினைவு நாள் “மகாகவி நாள் ”ஆக கடைப்பிடிக்கப்படும், “பாரதி இளங்கவிஞர் விருது” வழங்கப்படும், வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனடிப்படையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக மாற்றுவதற்கு, ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின் ஒரு பகுதி 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, அதில் பாரதியாரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கை குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மகாகவி பாரதியார் குறித்த குறும்படத்தினை முதலமைச்சர் பார்வையிட்டு, மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:பாரதியாருக்கும், புதுச்சேரிக்கும் இடையேயான பந்தம் - கலைமாமணி பட்டாபிராமன் சிறப்பு நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details