தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி, அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Stalin
Stalin

By

Published : Jun 15, 2021, 3:22 AM IST

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகிகளில் ஒருவரான பால லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் அவர்கள், இளம் வயதிலேயே உடல்நலக் குறைவால் காலமானார் என்ர செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details