சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள பதிவில், "சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்! தூர்வாருதல், புதிதாக 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டு உள்ளது.
"மழை என்றதுமே வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறிவிட்டது" - மு.க.ஸ்டாலின்! - மழை
M.K.Stalin Tweet for chennai rain issue : சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'X' வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது" - மு.க.ஸ்டாலின்
Published : Nov 4, 2023, 12:28 PM IST
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்" என்று பதிவிட்டு உள்ளார்.