தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்

நமது வெற்றி என்பது சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதிலோ, குற்றங்களை கண்டுபிடிப்பதிலோ இருப்பதைவிட, அவை, மக்களைப் பாதிக்காத வகையில் தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். மேலும் அவர் தன் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு என திட்டவட்டமாகத்தெரிவித்துள்ளார்.

என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான்..! - முதலமைச்சர் ஸ்டாலின்
என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான்..! - முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Mar 10, 2022, 5:31 PM IST

Updated : Mar 10, 2022, 5:49 PM IST

சென்னை:தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'சட்டம் ஒழுங்கு என்பது காவல் துறையின் பணி மட்டுமல்ல. மேலும், இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் மட்டுமல்ல.

காவல் துறைக்கு அறிவுரை

நமது மாநிலத்தினுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையினருடைய கல்வி, வேலைவாய்ப்பு என நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பரிணாமத்தையும் நிர்ணயிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தத் தருணத்தில் உங்களுக்கெல்லாம் மீண்டும் வலியுறுத்திக்கூற நான் விரும்புகிறேன். மாவட்ட ஆட்சித்தலைவர்களையும், காவல் துறை கண்காணிப்பாளர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது,

* உங்கள் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான மாதாந்திரக் கூட்டத்தை மிகுந்த கவனத்துடன் தவறாமல் நீங்கள் நடத்திட வேண்டும்.

* கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பிரச்னையால் இந்தக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை. எனவே, இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
மேலும் வாரந்தோறும் சட்டம் - ஒழுங்கு குறித்தும் நுண்ணறிவுப் பிரிவைச் சார்ந்தத் தகவல்கள் குறித்தும் கலந்து ஆலோசனையும் நீங்கள் தவறாமல் நடத்த வேண்டும்.

* என்னுடைய அடுத்த ஆலோசனை என்னவென்று கேட்டால், நீங்கள் உங்கள் மாவட்டத்தில் Dash Board ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடைபெறுகிற சட்டம் - ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரும் கூட்டங்களில் ஆராய்ந்து முழுமையாக அதற்கான தீர்வைக் காண வேண்டும்.

* சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும், குற்றங்களும் நிகழ்ந்து முடிந்த பின்பு அவற்றைத் தீர்ப்பதற்கும், புலனாய்வு செய்வதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட, அவை நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகள் தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். எனவே, நமது வெற்றி என்பது சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதிலோ, குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலோ இருப்பதைவிட, அவை, மக்களைப் பாதிக்காத வகையில் தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான்!

நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து பலமுறை நான் செய்தும் காட்டியிருக்கிறேன். அதையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். இதை நான் மீண்டும் சொல்வதற்குக் காரணம், வருங்காலத்திலும் இந்நிலை தொடர வேண்டும். தொடர்வதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். நான் உங்களுக்கு இறுதியாகச் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம் - ஒழுங்கினைப் பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்' என அவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க:உத்தரகாண்ட் தேர்தல்: தொடர்ந்த வரலாற்றை மாற்றிய பாஜக..!


Last Updated : Mar 10, 2022, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details