தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும்

தாம்பரம், ஆவடி ஆகிய நகரங்களை தலைமை இடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும்
காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும்

By

Published : Sep 13, 2021, 10:42 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திமுக ஆட்சியில் இருந்த போதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் காவல் துறையினரின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து வாதாடி வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியில் சாதி, மத சண்டைகள் இல்லை. துப்பாக்கி மோதல்கள் இல்லை.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையை சீரமைக்கும் வகையில் தாம்பரம், ஆவடி ஆகிய நகரங்களை தலைமை இடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நீண்ட நாள்கள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை நன்னடத்தை விதிகளை பின்பற்றி முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 10 காவல் நிலையங்களும் 4 தீயணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்படும்.

ஓய்வு பெற்ற காவலர்களுக்காக காவலர் நல வாரியம் அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், யாராலும் அதிலிருந்து தப்ப முடியாது" என்றார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details