தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கட்டடங்களை திறந்து வைத்த ஸ்டாலின் - Revenue

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

புதிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள்
புதிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள்

By

Published : Dec 20, 2022, 1:43 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வருவாய்த்துறை,மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாக விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டில் 1 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 54 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 2 கோடியே 79 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 2 கோடியே 79 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 3 கோடியே 82 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், சாத்தான்குளத்தில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும்,

மற்றும் திருச்சிராப்பள்ளியில் 2 கோடியே 59 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க:தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ABOUT THE AUTHOR

...view details