சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலை காலமானார். தமிழிசை தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - etv bharat
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று (ஆக.18) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழிசை தாயார் மறைவு- ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல்!