நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளான இன்று (செப். 17) பல்வேறு தலைவர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்தைப் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில், மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து. உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.