சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற இந்திய வரலாற்று காங்கிரஸ் 81-வது மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய முதலமைச்சர் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்களின் 3 மாத கைக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்ததோடு, குழந்தைக்கு ''திராவிட அரசன்'' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.