சென்னை:தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முனைப்புடன் செயல்பட வேண்டும்
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வரி வருவாய் இலக்கை முழுவதும் எய்திட அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்தப் புகார்களுக்கு எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும்.